/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி கொலை கணவர் கைது
/
மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மனைவி கொலை கணவர் கைது
ADDED : ஜூன் 02, 2025 12:59 AM

மூணாறு: மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி மனைவி நேற்று உயிரிழந்தார்.
இவ்வூராட்சியில் மலை வாழ் மக்கள் வசிக்கும் தாழும்கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுதங்கச்சன் 42. இவரது மனைவி மினி 39. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த ரகுதங்கச்சன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பரவியதால், மினி பலமாக கூச்சலிட்டார்.
அருகில் வசிப்பவர்கள் சப்தம் கேட்டு சென்ற போது, உடலில் தீப்பற்றிய நிலையில் மினி, துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 90 சதவீத தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரமனா தலைமையிலான போலீசார் ரகுதங்கச்சனை கைது செய்தனர். தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இருந்த மனைவி மினி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.