ADDED : ஏப் 27, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாநில செயலாளர் சென்னமராஜ், மாவட்ட தலைவர் உடையாளி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தங்கமீனா, சி.பி.எஸ்., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ. 6850 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கு புதிய அலைபேசி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.