/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க.,அணிகள் இணையாவிட்டால் 2026 தேர்தலில் வெற்றி எளிதல்ல பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் பேட்டி

ADDED : ஏப் 24, 2025 06:05 AM
உத்தமபாளையம்: அ.தி.மு.க., அணிகள் இணையாவிட்டால் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி எளிதல்ல என அ.தி.மு.க.உரிமை மீட்புக் குழு மாவட்ட செயலாளர் சையதுகான் தெரிவித்தார்.
உத்தமபாளையத்தில் அவர் கூறியதாவது :
ஜெ.,மறைவிற்கு பின் அ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்ததால் தேர்தல்களில் வெற்றியே பெற முடியவில்லை. இதற்கு தலைவர்களுக்கு இடையே உள்ள 'ஈ.கோ.'  தான் காரணம். அதை மறந்து ஒன்றுபட வேண்டும். தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கும் செல்லவில்லை. அ.தி.மு.க. அணிகள் ஒன்றுபடுவதை  விரும்புகின்றனர். ஒரு சிலர் சுய லாபத்திற்காக எதிர்க்கின்றனர்.
தி.மு.க. வை வீழ்த்த அ.தி.மு.க ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்.  ஓ.பி.எஸ்.,ஒன்றுபட நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை. தற்போது அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி உறுதியானதல்ல. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தான் தெரியும். அ.தி.மு.க. ஒன்றுபட்டால் வெற்றி உறுதி. இல்லையென்றால் சந்தேகமே என்றார்.