sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முருங்கைக்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு....: வெளிமாவட்ட வரத்தால் கிலோவிற்கு ரூ. 20 குறைவு

/

முருங்கைக்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு....: வெளிமாவட்ட வரத்தால் கிலோவிற்கு ரூ. 20 குறைவு

முருங்கைக்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு....: வெளிமாவட்ட வரத்தால் கிலோவிற்கு ரூ. 20 குறைவு

முருங்கைக்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு....: வெளிமாவட்ட வரத்தால் கிலோவிற்கு ரூ. 20 குறைவு


ADDED : ஜூலை 17, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, ஏத்தக்கோவில், போடிதாசன்பட்டி, மறவபட்டி, கொத்தப்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, கணேசபுரம், கண்டமனூர், கடமலைக்குண்டு உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி உள்ளது. இப்பகுதியில் விளையும் முருங்கை காய்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. முதல் தர காய்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தொடர் மழை, பனி காலங்கள் முருங்கை விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது சீதோஷ்ணம் முருங்கை விளைச்சலுக்கு ஏற்றதாக இருப்பதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை குறைகிறது. விளைச்சலுக்கான செலவு அதிகரித்து விலை குறைவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: முருங்கை சாகுபடியில் உரம், மருந்து செலவுகள் அதிகமாகிறது. மரங்கள் பூத்து பிஞ்சு எடுக்கும் பருவத்தில் மழை பெய்தால் விளைச்சல் பாதிக்கும். மீண்டும் உரம் இட்டு, மருந்து தெளிப்புக்கு பின் பூக்கள் எடுக்க சில வாரங்களாகும். கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.80 முதல் 90 வரை இருந்த முருங்கை காய்கள் தற்போது கிலோ ரூ.20 வரை குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

வியாபாரிகள் கூறியதாவது:தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி தாலுகாக்களில் முருங்கை விளைச்சல் அதிகம் உள்ளது. சீசன் காலங்களில் இம் மாவட்டத்திலிருந்து 50 டன் வரை மதுரை, சென்னை மார்க்கெட்டுகளுக்கு செல்கிறது. தற்போது தினமும் ஆண்டிபட்டி பகுதியில் இருந்து 20 டன் வரை விற்பனைக்கு செல்கிறது. இங்கு விளையும் முருங்கை காய்களுக்கு போட்டியாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்தும் குறைந்த விலைக்கு காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. குஜராத் மாநிலம் பரோடாவில் இருந்தும் சென்னைக்கு முருங்கை காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தேனி மாவட்டத்தில் விளையும் முருங்கைக்கு சுவை அதிகம் என்பதால் வியாபாரிகள் அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். முருங்கை காய்களை நீண்ட நாட்கள் இருப்பில் வைக்க முடியாது. பறித்த சில நாட்களில் பயன்படுத்த வேண்டும். இன்னும் சில வாரங்களில் துவங்கும் முகூர்த்த சீசனில் முருங்கைக்காய் விலை உயரும் வாய்ப்பு உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us