/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளை நிலங்களில் புகுந்த மழைநீரால் பாதிப்பு
/
விளை நிலங்களில் புகுந்த மழைநீரால் பாதிப்பு
ADDED : நவ 04, 2024 05:18 AM
பெரியகுளம் : பெரியகுளம் தாலுகாவில் உருட்டிகுளம் நிரம்பிய நிலையில் உபரிநீர் செல்லும் வாய்க்கால் சீரமைக்கப் படாததால் விளை நிலங்களில் தண்ணீர் சென்றது. இதனால் நுாறு ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே கீழவடகரை பகுதியில் ஆண்டிகுளம் உள்ளது. உருட்டிக்குளமும் நிரம்பிய நிலையில் அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் வாய்க்காலை நீர் வளத்துறை சீரமைக்கவில்லை. அருகேயுள்ள வயல்களில் மழை நீர் புகுந்து தேங்குகிறது. சில நாட்களுக்கு முன் நெல் நடவு செய்த நிலங்களில் தண்ணீர் பரவி தேங்கியுள்ளது. நுாறு ஏக்கர் நெல் நடவு செய்த வயல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. வேளாண் துறையினர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என, நெல் விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.