/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., லோக்சபா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா
/
பா.ஜ., லோக்சபா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா
ADDED : ஜன 31, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ., லோக்சபா தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.
மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், லோக்சபா தொகுதி பார்வையாளர் ரவிபாலராஜா, அமைப்பாளர் ராஜபாண்டியன், இணைச் செயலாளர் ராமநாதன், மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், மாவட்ட ஐ.டி., பிரிவு தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அலுவலக பொறுப்பாளர் தேவகுமார் செய்திருந்தார்.