/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோணம்பட்டி சந்திப்பில் வாகன விபத்து அதிகரிப்பு தானியங்கி சிக்னல், ரிப்ளக்டர் அவசியம்
/
கோணம்பட்டி சந்திப்பில் வாகன விபத்து அதிகரிப்பு தானியங்கி சிக்னல், ரிப்ளக்டர் அவசியம்
கோணம்பட்டி சந்திப்பில் வாகன விபத்து அதிகரிப்பு தானியங்கி சிக்னல், ரிப்ளக்டர் அவசியம்
கோணம்பட்டி சந்திப்பில் வாகன விபத்து அதிகரிப்பு தானியங்கி சிக்னல், ரிப்ளக்டர் அவசியம்
ADDED : ஜூன் 28, 2025 11:52 PM

போடி: போடி -- தேவாரம் செல்லும் மெயின் ரோடு கோணாம்பட்டி பிரிவு சந்திப்பில் தானியங்கி சிக்னல், வேகத் தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிர் பலியாகிறது.
போடி - தேவாரம் வழியாக உத்தமபாளையம் செல்லும் இருவழி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிதுவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வெம்பக்கோட்டையில் இருந்து கோணாம்பட்டி பிரிவு வரை ஒன்றரை கி.மீ., தூரம் இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றிட ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.6.20 கோடி செலவில் ரோடு, தடுப்புச் சுவர், பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
கோணம்பட்டி பிரிவு சந்திக்கும் வகையில் ரோடு அமைந்துள்ளது. போடி - தேவாரம், உத்தமபாளையம், கம்பம், குமுளி, கேரளா செல்லும் 800 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
உத்தமபாளையம் செல்லும் வாகனங்கள் சங்கராபுரம், சின்னமனூர் வழியாக செல்லாமல் தேவாரம் மெயின் ரோடு வழியாக உத்தமபாளையம், கம்பம் வழியாக குமுளி, கம்பம் மெட்டு, கேரளா செல்கின்றன. இதனால் தூரம், நேரம் குறைவதால் இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
போடி - தேவாரம் ரோட்டில் கோணாம்பட்டி பிரிவு சந்திப்பில் போக்குவரத்தை முறைப்படுத்த தானியங்கி சிக்னல், வேக தடுப்புகள் இல்லை. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியாவது தொடர்கிறது. வளைவான ரோட்டில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
ரவுண்டானா அமைக்க வேண்டும்
அசோகன், அரசு போக்குவரத்து கழக டிரைவர், போடி : போடி -- தேவாரம் மெயின் ரோட்டில் கோணாம்பட்டி பிரிவு சந்திக்கும் இடத்தில் சிக்னல், ரவுண்டானா இன்றி கூம்பு வடிவில் அமைந்துள்ளது. மாற்றுப் பாதையான கோணாம்பட்டி பிரிவு அமைந்துள்ள இடம் இரவில் தெரிவதில்லை. இதனால் கோணாம்பட்டி பிரிவில் பஸ்சை உடனே திருப்ப முடியாத நிலை ஏற்படுகிறது.
அப்படியே திருப்பினாலும் தேவாரத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் பஸ் மீது மோதும் நிலை ஏற்படுகிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. கூம்பு வடிவ தடுப்பு உள்ள இடத்தில் சிறிய ரவுண்டானா அமைக்க வேண்டும். இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தானியங்கி சிக்னல் தேவை
கண்ணன், விவசாயி, சங்கராபுரம் : நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மது போதை, விதி மீறி வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோணாம்பட்டி பிரிவில் விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான முறையில் தானியங்கி சிக்னல், விபத்து பகுதி என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் சிக்னல்கள், ஒளிரும் ஸ்டிக்கர், வேகத்தடுப்பு அமைக்க வேண்டும்.