/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகளிடம் அதிகரிக்கும் திருட்டு
/
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகளிடம் அதிகரிக்கும் திருட்டு
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகளிடம் அதிகரிக்கும் திருட்டு
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகளிடம் அதிகரிக்கும் திருட்டு
ADDED : பிப் 07, 2024 12:40 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பஸ்சுக்காக பல நேரங்களில் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் கூட்டமாக காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. கூட்டத்தில் திருடும் பெண்கள் சிலர் பயணிகளுடன் காத்திருப்பதை நோட்டமிடுகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள் கட்டைப் பையில் வைத்திருக்கும் பொருட்கள், பணப்பை ஆகியவற்றை எளிதில் திருடி விடுகின்றனர். பொருட்கள், பணத்தை தவறவிட்ட வெளியூர் பயணிகள் புகார் கொடுப்பதை தவிர்த்து சென்று விடுகின்றனர்.
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் போலீசார் கண்காணிப்பு இல்லை. கண்காணிப்பு கேமராவும் செயல்படாததால் காத்திருக்கும் பயணிகள் போல் வந்து செல்லும் திருடர்கள் எளிதில் தப்பி விடுகின்றனர்.
தொடர்ச்சியாக நடக்கும் இச்சம்பவத்தை தடுக்கும் நடவடிக்கை இல்லை.
ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு கேமரா செயல்படவும், போலீசார் ரோந்து நடவடிக்கையை தீவிர படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.