ADDED : ஜூன் 23, 2025 05:55 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி இந்திய கம்யூ., சார்பில் தனியார் திருமண மஹாலில் மாவட்ட அளவிலான 9வது மாநாடு நடந்தது.
இரு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் சக்கம்பட்டி மெயின் ரோட்டில் கட்சி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊர்வலத்தை திருப்பூர் எம்.பி. சுப்புராயன் துவக்கி வைத்தார். சக்கம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் வைகை ரோட்டில் நிறைவடைந்தது.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உட்பட பல பேசினர். நகரச் செயலாளர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.
2ம் நாளில் நடந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பெருசு கொட ஏற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்டச் செயலாளர் பெருமாள் உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் 31 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட செயலாளராக பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் நன்றி தெரிவித்தார்.
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் ரோடு அமைக்கவும், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து கண்மாய்களில் நிரப்பவும், திண்டுக்கல் - சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.