/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சந்தேகப்படும் நபர்கள் குறித்த தகவல் அளிக்க வேண்டும்: ஏ.டி.எஸ்.பி., பேச்சு முதலுதவி முகாமில் ஏ.டி.எஸ்.பி., பேச்சு

ADDED : அக் 06, 2024 03:52 AM

தேனி : தேனி நலம் மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி, உடல் பரிசோதனை முகாம் நடந்தது. பயிற்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாக ஆலோசகர் டாக்டர் பிரபாகரன் வரவேற்றார்.
ஏ.டி.எஸ்.பி., சுகுமார் பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், 'போலீசார், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் உள்ளிட்டோர் 24 மணிநேரமும் பணி செய்யும் சூழல் உள்ளது.
உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். டாக்டர்கள் கூறும் அறிவுரைகள், மருந்துகளை பின்பற்ற வேண்டும்.
விபத்து நடக்கும் போது ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்கின்றனர். அவர்கள் முதலுதவி செய்வது பற்றி தெரிந்து கொள்வது நல்லது. இரவில் பயணிகள் ஏற்றி செல்லும் போது சந்தேகப்படும்படியான நபர்கள், செயல்கள் நடந்தால்,போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அவரின் ரகசியம் காக்கப்படும், 'என்றார்
டாக்டர் ராஜ்குமார் முதலுதவி சிகிச்சை செய்வது பற்றி டிரைவர்களுக்க செயல் விளக்கம் அளித்தார். விழாவில் தேனி மேலப் பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமை மருத்துவமனை மேலாளர் பாசில் ஒருங்கிணைத்தார்.