ADDED : பிப் 22, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி ஒன்றியம் காட்டுநாயக்கன்பட்டி வடக்குத் தெருவில் நேற்று காலை 10:30 மணி அளவில் வானில் பறந்த கொண்டிருந்த கழுகு கீழே விழுந்தது.
அதன் இடது இறக்கையில் காயம் ஏற்பட்டிருந்ததால் அதனால் பறக்க இயலவில்லை. அதனை மீட்ட அப்பகுதி இளைஞர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனுார் வனவர் ஜெயக்குமார் தலைமையிலான வனத்துறையினர் கழுகை வாங்கிச் சென்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், கழுகின் காயத்திற்கு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, வனத்துறை அலுவலகத்தில் உள்ளது.
விரைவில் வனப்பகுதியில் விடப்படும்.', என்றனர்.