/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சிகளில் குடிநீர் பரிசோதனை செய்ய... வலியுறுத்தல்
/
ஊராட்சிகளில் குடிநீர் பரிசோதனை செய்ய... வலியுறுத்தல்
ஊராட்சிகளில் குடிநீர் பரிசோதனை செய்ய... வலியுறுத்தல்
ஊராட்சிகளில் குடிநீர் பரிசோதனை செய்ய... வலியுறுத்தல்
ADDED : பிப் 19, 2024 05:11 AM
'பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.' என, உள்ளாட்சிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் குடிநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மாதந்தோறும் குடிநீர் மாதிரிகளை எடுத்து, வைகை அணையில் உள்ள குடிநீர் வாரிய ஆய்வகத்தில் கொடுத்து, பரிசோதிப்பது வழக்கம். இந்த ஆய்வுக்கு வழங்கப்படும் குடிநீர் மாதிரிகளில் குளோரின் முறையாக கலக்கப்பட்டு இருக்கிறதா, குடிநீர் மனிதர்கள் பருக உகந்ததா என ஆய்வு செய்தனர். ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், ஊராட்சிகளில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து, திருநெல்வேலியில் உள்ள பொதுச் சுகாதார துறையின் கீழ் இயங்கும் குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
பேரூராட்சிகள், நகராட்சிகளில் ஆண்டிற்கு மூன்று முறை முறையாக குடிநீரின் தரத்தினை பரிசோதனை செய்கின்றனர்.
ஊராட்சிகளில் ஆண்டிற்கு ஒரு முறை அதுவும் மேலோட்டமாக பார்க்கப்படுகிறது.
வைகை அணையில் உள்ள குடிநீர் வாரியத்தின் ஆய்வகத்தில் முழு அளவிலான பரிசோதனைகள் செய்வதற்கான மேம்படுத்தப்பட்ட கருவிகள் இல்லை. திருநெல்வேலியில் உள்ள மண்டல பகுப்பாய்வு மையத்தில் தான் முழு அளவில் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் உள்ளன. மேலும் குடிநீர் பரிசோதனைகளை பொதுச் சுகாதாரத்துறை தான் மேற்கொள்ள வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் குடிநீர் தர பரிசோதனை செய்வதற்கான பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிக்கப் படாமல் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் பொது மக்கள், சிறார்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீரை முழு அளவில் பரிசோதிக்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

