/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முத்து கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
/
முத்து கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
முத்து கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
முத்து கருப்பண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2025 07:24 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் முத்து கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உத்தமபாளையத்திலிருந்து உ.அம்மாபட்டி செல்லும் வழியில் பாறையடி முத்து கருப்பணசாமி கோயில் உள்ளது.
மலைக் குன்று மீது இருந்த சிவன் கோயிலிற்கு காவல் தெய்வமாக 700 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது.
மூலவர் முத்து கருப்பணசாமி நின்ற கோலத்தில் கையில் அரிவாள், முறுக்கிய மீசையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். சன்னதிக்கு வெளிப்பிரகாரத்தில் இரண்டு பக்கங்களிலும் காவல் தெய்வங்களாக இரண்டு பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இங்கு வெள்ளிக்கிழமைகளில் கிடாவெட்டி காதணி விழா நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும்.
சிதிலமடைந்த இந்த கோயில் 1997 ல் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.
அதன் பின் 25 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி, மகா கும்பாபிஷேகம் நடந்த ஹிந்து அறநிலையத் துறை முடிவு செய்தது. கடந்த 2023 செப் 12 ல் பாலாலயம் நடைபெற்றது. ரூ.59 லட்சம் செலவில் உபயதாரர்கள் திருப்பணி செய்து வருகின்றனர்.
திருப்பணிகள் துவங்கி 20 மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படாமல் உள்ளது.
இங்கு ராஜ கோபுரம் இல்லாததால் திருப்பணிகள் செய்வது எளிது. எனவே இந்த கோயில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.