/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு சென்று திரும்புவோர்கள் மீது ஆரம்ப சுகாதார நிலையங்கள் விபரம் அளிக்க அறிவுறுத்தல்
/
ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு சென்று திரும்புவோர்கள் மீது ஆரம்ப சுகாதார நிலையங்கள் விபரம் அளிக்க அறிவுறுத்தல்
ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு சென்று திரும்புவோர்கள் மீது ஆரம்ப சுகாதார நிலையங்கள் விபரம் அளிக்க அறிவுறுத்தல்
ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு சென்று திரும்புவோர்கள் மீது ஆரம்ப சுகாதார நிலையங்கள் விபரம் அளிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜன 09, 2024 06:08 AM
தேனி : மாவட்டத்தில் ‛ஜே.என்.1' வகை கொரோனா பாதிப்பை தடுக்க ஐரோப்பா, ஆசிய நாடுகளுககு சென்று திரும்பும் வணிகர்கள், சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து கண்காணித்து பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சளி, உமிழ்நீர் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப பொது சுகாதாரத்துறை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் ஜே.என்.1., வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேனி மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளதாலும், உத்தமபாளையம், கம்பம், போடி பகுதிகளில் இருந்து அதிகமான வணிகர்கள், வர்த்தகர்கள் ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு அடிக்கடி வியாபார சம்மந்தமாக சென்று வருகின்றனர். மேலும் கேரளாவில் வாசனை பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தமிழ்நாடு வழியாக கேரளா செல்கின்றனர்.
ஜே.என்.1., வகை தொற்று ஏற்படாமல் இருக்க முதலில் விமான நிலையங்களில் கண்காணிக்கப்படுகிறது. அங்கு அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். வெளிநாடு சென்று திரும்புவோர் விபரங்களை சேகரித்து பாதிப்பு அறிகுறியுடன் வந்தால் அவர்களை ஆரம்ப சுகாதார நிலையஙகள், நகர்நல நலவாழ்வு மையங்கள் உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சளி, உமிழ்நீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அடிக்கடி கைகளை கழுவுவது, ‛சானிடைசர்' பயன்படுத்துவதை பழக்கமாக்கி கொள்வது உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், வளரிளம் பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் ஊரகப்பகுதிகள், நகர்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.