/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்சூரன்ஸ் நிறுவனம் மூடல் வாடிக்கையாளர்கள் அவதி பெரியகுளத்தில் செயல்படுத்த வலியுறுத்தல்

ADDED : அக் 23, 2024 05:10 AM
பெரியகுளம் : பெரியகுளத்தில் செயல்பட்டு வந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் முன் அறிவிப்பின்றி மூடியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
பெரியகுளத்தில் மோட்டார் வாகன தொழில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் பலரும் லாரி, பஸ்கள் வைத்து இயக்குகின்றனர். தேனி ரோட்டில் தனியார் கட்டட மாடியில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் 2014 முதல் செயல்பட்டது.
இங்கு டூவீலர், கார், வேன், லாரி, மினிபஸ், பஸ் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் உரிமையாளர்கள் காப்பீடு செய்தனர். பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 500க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகன இன்சூரன்ஸ் செய்து வந்தனர். மேலும் வங்கிகளில் வழங்கும் கால்நடை கடன்களில் பெறப்படும் மாடு, ஆடுகளுக்கும் காப்பீடு செய்தனர்.
வாகன உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு பயனாக இருந்தது.
இந்நிலையில் இந்த அலுவலகத்தில் அலுவலராக ஆனந்தன் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ஆனந்தன் கடந்த செப்டம்பரில் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றார். இதனால் பெரியகுளம் அலுவலகம் முன் அறிவிப்பின்றி மூடப்பட்டது.
இங்குள்ள இன்சூரன்ஸ் கணக்குகள் தேனி நிறுவனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தேனிக்கு சென்று வருவதால் நேரம், பணம் விரையம் ஏற்படுகிறது. மீண்டும் பெரியகுளத்தில் நிறுவனம் செயல்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.