/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பூச்சி மருந்து தெளிப்பு தீவிரம்
/
நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பூச்சி மருந்து தெளிப்பு தீவிரம்
நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பூச்சி மருந்து தெளிப்பு தீவிரம்
நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பூச்சி மருந்து தெளிப்பு தீவிரம்
ADDED : பிப் 10, 2024 05:45 AM

உத்தமபாளையம்: நெல் பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் நோய் காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் நெல் வயல்களில் பூச்சி மருந்து தெளித்து கட்டுப்படுத்த விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பில் கூடலூர் முதல் பழநிசெட்டிபட்டி வரை இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறுவடை துவங்க உள்ளது.
இந்நிலையில் உத்தமபாளையம் வட்டாரத்தில் பரவலாக நெற்பயிரில் இலைக் கருகல் நோய் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேளாண் துறை் ஆலோசனைப்படி காப்பர் ஆக்சி குளோரைடு 10 கிராம் , - ஸ்டெப் ட்ரோமைசின சல்பேட் 6 கிராம், லேம்டா சைஹ லோதிரின் 25 மில்லியை ஒரு டேங்கில் கலந்து தெளித்து வருகின்றனர். 20 நாள் இடைவெளியில் தெளித்து வருகின்றனர்.