/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரிகளுக்கு இடையே பூப்பந்து போட்டி; கருத்தராவுத்தர் கல்லூரி இரண்டாமிடம்

ADDED : அக் 02, 2024 07:24 AM

உத்தமபாளையம் : மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராத்தர் கல்லூரி அணி இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றது.
மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையேயான 'சி' மண்டல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். கலை,அறிவியல் கல்லூரியில் ஆண்களுக்கான பூப்பந்து விளையாட்டு போட்டிகள் செப். 26 ல் நடந்தது.
போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கல்லூரி அணிகளும் பங்கு பெற்றன.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி அணி, இரு அணிகளை தோற்கடித்து இறுதிப் போட்டியில் பங்கேற்றது. இறுதிப் போட்டியில் திண்டுக்கல் ஜி. டி.என். கல்லூரியுடன் விளையாடி இரண்டாம் இடத்தையும், பல்கலை அளவில் இரண்டாம் இடம் பெற்ற பூப்பந்தாட்ட அணியினரை தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சிமன்ற குழு தலைவர் முகமது மீரன், முதல்வர் எச். முகமது மீரான் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலியையும் பாராட்டி கவுரவித்தனர்.