/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
/
மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
ADDED : ஆக 31, 2025 04:18 AM
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலையில் நடந்தது.
வணிக மேலாண்மையியல் துறை சார்பில் 'எதிர்கால சந்தைப்படுத்துதலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்திய குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத் தலைவர் ஜெயக்கொடி, எத்தியோப்பியா கோட்பே கல்விப் பல்கலை வணிக தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர் ஹெய்லி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி உதவி பேராசிரியர் பால்பாண்டி ஆகியோர் பேசினர். சந்தைப் படுத்துபவர்களுக்கு தேவையான உத்தி முறைகள், மின் வணிக சந்தையின் அளவு மற்றும் வளர்ச்சி, மொபைல் வர்த்தகங்கள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவின் பங்கு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
வணிக மேலாண்மையில் துறை இணைப் பேராசிரியர் சமந்தா, உதவி பேராசிரியர் பிரியா, துறைத் தலைவர் சுசீலா, ஆலோசனை குழு உறுப்பினர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

