/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் வேதியியல் துறை சர்வதேச கருத்தரங்கு
/
கல்லுாரியில் வேதியியல் துறை சர்வதேச கருத்தரங்கு
ADDED : ஜன 25, 2025 05:08 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் சர்வதேச அளவிலான 'வேதியியல் துறையில் சமீப கால முன்னேற்றங்கள் 'என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் கமால் நாசர் வரவேற்றார். பேராசிரியர் அப்துல்காதர் ஜெய்லானி முன்னிலை வகித்தார். தாய்லாந்து பல்கலை பேராசிரியர் சிட்டி போர்ன் சூரிச்சம், மலேசியாபல்கலை பேராசிரியர் கவுதமன், கோவை ராமகிருஷ்ணா கல்லூரி பேராசிரியர் பாலகுமார் உள்பட பலர் பேசினர்.சுற்றுச் சூழல் மற்றும் எரிசக்தி பயன்பாடுகளுக்கான ஒளி வினையூக்கி மற்றும் மின்வேதி உணரிகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கினர். உதவி பேராசிரியர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார். கல்லூரிகளை சேர்ந்த வேதியியல் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.