/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதலீட்டாளர் மாநாடு நேரடி ஒளிபரப்பு
/
முதலீட்டாளர் மாநாடு நேரடி ஒளிபரப்பு
ADDED : ஜன 08, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கு, உப்பார்பட்டி சிப்காட் வளாகத்தில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துவங்கிய உலக முதலீட்டாளர் மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.
நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, தேனி, ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன், ஐ.டி.ஐ., மாணவர்கள், சிட்கோ தொழிற்பேட்டை அதிபர்கள் சங்கத்தினர், சிறு, குறு நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உலக முதலீட்டாளர் மாநாட்டு லோகோவை 'மெஹந்தி மூலம் தனது கையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.