ADDED : ஜூன் 27, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டிகள் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10:00 மணி முதல் நடக்கிறது. ஒரு பள்ளிக்கு இரு மாணவர்கள் தலைமைஆசிரியர் பரிந்துரை கடிதத்துடன் பங்கேற்க வேண்டும்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2ம் பரிசு ரூ.3ஆயிரம், 3ம் பரிசு ரூ.2 ஆயிரம், மேலும் இரு ஆரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.