/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சோலார் மின் திட்டத்தில் இணைய நுகர்வோருக்கு அழைப்பு: சிறப்பு முகாம்கள் நடத்த மின்வாரியம் திட்டம்
/
சோலார் மின் திட்டத்தில் இணைய நுகர்வோருக்கு அழைப்பு: சிறப்பு முகாம்கள் நடத்த மின்வாரியம் திட்டம்
சோலார் மின் திட்டத்தில் இணைய நுகர்வோருக்கு அழைப்பு: சிறப்பு முகாம்கள் நடத்த மின்வாரியம் திட்டம்
சோலார் மின் திட்டத்தில் இணைய நுகர்வோருக்கு அழைப்பு: சிறப்பு முகாம்கள் நடத்த மின்வாரியம் திட்டம்
ADDED : அக் 11, 2025 04:41 AM

தேனி: பிரதமரின் சோலார் மின் திட்டத்தில் இணைந்து மின் கட்டண செலவை குறைத்தும், கூடுதல் மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்கி நுகர்வோர் பயன்பெறலாம். இத் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். மத்திய அரசு 'சூரியகர்'சூரிய ஒளி மின்திட்டத்தை 2024ல் அறிமுகம் செய்தது. குடியிருப்புகள், வீடுகளில் சோலார் பேனல்அமைத்து அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தவும், மீதியுள்ள மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்கி வருவாய் ஈட்டலாம்.
மானியம் எவ்வளவு ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட்டுக்கு ரூ.78 ஆயிரமும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க 8 அடி நீளம், 4 அடி அகலம் உள்ள பகுதியே போதுமானது. இதற்கு ரூ.80 ஆயிரம் செலவாகும். 2 கிலோ வாட் பேனலுக்கு ரூ.1.50 லட்சம், 3 கிலோ வாட் ரூ.2 லட்சமும் செலவாகும். மின்வாரியத்தின் மூலம் சோலார் பேனல் அமைப்பாளர்களாக 14 நிறுவனங்கள் அனுமதி பெற்றுள்ளன. மின்நுகர்வோர்கள் இந்த அமைப்பாளர்கள் மூலம் http://pmsuryaghar.gov.in என்ற இணையத் தளத்தில்விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கூறிதாவது: இத்திட்டத்தில் இணைய பணம் இல்லை என விண்ணப்பதாரர்கள் தயங்க வேண்டிய அவசியம்இல்லை. பொதுத்துறை வங்கிகளில் ரூ.2 லட்சம் வரை விண்ணப்பதாரருக்கு ஜாமின் இல்லாத கடன் வழங்க முன் வருகின்றன. மின்வாரியம் இணைந்து 15 நாட்களில் சோலார் பேனல் அமைத்துத்தரப்படும்.மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் 25 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டும் அரிய வாய்ப்பும் உள்ளது. சின்னமனுார் சப்டிவிஷனில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. பெரியகுளம் சப்டிவிஷனில் அக்.13ல் நடக்க உள்ளது. பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
நுகர்வோருக்கு சலுகை செயற்பொறியாளர் (பொது) ரமேஷ்குமார் கூறுகையில், ' ஒரு கிலோ வாட் சோலார் பேனல் நாள் ஒன்றுக்கு (பகலில் 8 மணி நேரத்தில்)5 யூனிட் சூரிய மின்சாரம் கிடைக்கும். அதில் அவரது மின் பயன்பாடு 3 யூனிட் என்றால் மீதியுள்ள 2 யூனிட் தானாகவேமின்வாரியத்திற்கு சென்றுவிடும்.
மாலை 6:00 மணியில் இருந்து மறுநாள் 7:00 மணி வரை நுகர்வோர் பயன்படுத்தும்மின்சார யூனிட் அளவில், ஏற்கனவே வாரியத்திற்கு வழங்கிய மின்சாரத்தை கழித்து கொள்ளலாம். இதனால் மின் கட்டணத்தில் சிக்கனம் ஏற்படும். இது 'நெட் மீட்டரிங்' ஆகும். இச்சலுகையும் இத்திட்டத்தில் உண்டு என்றார்.