ADDED : ஜூலை 24, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் கூறியதாவது: அரசு ஐ.டி.ஐ.,யில் 13 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிகள் ஒரு, இரு ஆண்டு அளிக்கப்படுகிறது. பல்வேறு பயிற்சிகளில் சேர்வதற்கு நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
பயிற்சி பெறுபவர்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களில் பயன்பெறலாம், உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்ப முள்ளவர்கள் உரிய கல்வி சான்றிதழுடன், தேனி அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரில் வரலாம் என்றார்.