/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி திறப்பு கானல் நீராகிறதா ...: வகுப்பறைகள் ஒதுக்கீடு செய்தும் திறக்கப்படாத நிலை

ADDED : ஜூலை 10, 2025 03:28 AM

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு குறைந்த கல்வி கட்டணத்தில் மாணவர்கள் கல்வி பயில இயலும். இங்கு வழங்கப்படும் கல்வி சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு இணையாதாக இருக்கும்.
இதனால் இந்த பள்ளியில் சேர்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் போட்டி நிலவும். அருகில் உள்ள மாவட்டங்களான திண்டுக்கலில் ஒன்று, மதுரையில் இரு கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி திறக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
இக் கோரிக்கைகளுக்கு பலனாக கடந்தாண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தஞ்சை, தேனியில் புதிதாக கேந்திர வித்யாலயா பள்ளி துவங்க ஒப்புதல் அளித்தது.
விரைவில் வகுப்பு துவங்கப்படும் என எம்.பி., தங்கதமிழ்செல்வன் தெரிவித்திருந்தார். மற்ற மாவட்டங்களில் இந்த கல்வியாண்டிற்கான அட்மிஷன் முடிந்து வகுப்புகள் துவங்கி விட்டன.
தேனி மாவட்டத்தில் இந்த பள்ளி செயல்படுவதற்காக தேனி நகராட்சிக்குட்பட்ட அல்லிநகரம் நகராட்சி ஆரம்பபள்ளி ஒதுக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே உள்ள வகுப்பறைகள் ரூ.9.90 லட்சம் மதிப்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டது.
குடிநீர் குழாய் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டனர். அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. அல்லிநகரம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தற்போது ஒரே பள்ளி வளாகத்தில் இரு அரசுப்பள்ளி நிர்வாகங்கள் தனித்தனியே நடந்து வருகிறது. நகராட்சி ஆரம்ப பள்ளி பல நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இடம் ஒதுக்கீடு செய்தும் கே.வி., பள்ளி அட்மிஷன், எந்தெந்த வகுப்புகள் நடக்க உள்ளது என கே.வி., பள்ளி நிர்வாகம் சார்பிலோ மாவட்ட நிர்வாகம் சார்பிலோ எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் கே.வி. பள்ளி செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகமும், கே.வி., பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.