/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மக்களிடம் ஆர்வம் குறைகிறதா - கூடலுாரில் களையிழந்த முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மக்களிடம் ஆர்வம் குறைகிறதா - கூடலுாரில் களையிழந்த முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மக்களிடம் ஆர்வம் குறைகிறதா - கூடலுாரில் களையிழந்த முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மக்களிடம் ஆர்வம் குறைகிறதா - கூடலுாரில் களையிழந்த முகாம்
ADDED : ஜூலை 26, 2025 04:19 AM

கூடலுார்: கூடலுார் நகராட்சியில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் களையிழந்து காணப்பட்டதால் மக்களிடம் ஆர்வம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நகராட்சியின் மாநில நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில் 7, 8 வார்டுகளில் உள்ள பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன.
காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை நடந்த முகாமில் 18 துறை சார்ந்த சேவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நேற்று நடந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை வேண்டி 309 பேர் மனுக்கள் வழங்கப்பட்டன.
வருவாய்த் துறையில் 33 மனுக்களும், தகவல் தொழில்நுட்பவியல் துறையில் 40 மனுக்களும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 27 மனுக்களும் என மொத்தம் 470 மனுக்கள் பெறப்பட்டன.
ஆர்வம் குறைந்ததா முதல் கட்டமாக 1, 2, 3 வார்டுகளுக்கு நடந்த முகாமில் ஏராளமான மக்கள் குவிந்து முகாம் முடியும் வரை கூட்ட நெரிசலாகவே இருந்தது.
இந்நிலையில் 2ம் கட்டமாக 7, 8 வார்டுகளுக்கு நேற்று நடந்த முகாமில் பொது மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டாமல் இருந்ததை பார்க்க முடிந்தது. அலுவலர்களும் ஆங்காங்கே ஹாயாக அமர்ந்திருந்தனர்.
பொது மக்கள் கூறியதாவது: கடந்தாண்டு அரசு சார்பில் நடந்த முகாமில் கொடுத்த மனுக்களுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை. பெயரளவில் ஓரிரு மனுக்களுக்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டன. மகளிர் உரிமை தொகைக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் மனு செய்துள்ளனர்., என்றனர்.