ADDED : ஜூன் 19, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் உள்ளகத் தர உறுதிக்குழு மூலம் பிரதமர் ஜன்ஆரோக்கிய யோஜனா திட்ட துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் மைதலி வரவேற்றார்.
மாநில அறிவியல், தொழில்நுட்ப பேரவை முன்னாள் செயலாளர் சீனிவாசன் திட்டம் பற்றி விளக்கினார். ஹைத்ராபாத் பிரைம்ஸ்நெட் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரீத்தி கபாடியா திட்ட செயலி பற்றி விளக்கினார். கல்லுாரி உடற்கல்வி துறைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.