/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டியில் ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா
/
வீரபாண்டியில் ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா
வீரபாண்டியில் ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா
வீரபாண்டியில் ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா
ADDED : ஜூன் 06, 2025 03:14 AM

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சன்னதி வீதி எதிரில் உள்ள ஜானகி முத்தையா ஏ.சி., திருமண மஹால் திறப்பு விழா நடந்தது. திறப்பு விழா கணபதி ஹோமம், மீனாட்சி திருக்கல்யாணத்துடன் துவங்கியது. மஹால் இயக்குனர் முத்தையா ஜானகி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
திறப்பு விழாவில் தேனி அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தொழிலதிபர் உசிலம்பட்டி மாஸ்கோ, தேனி ரோட்டரி கிளப் கவர்னர் ரமேஸ், ரியல் எஸ்டேட் அதிபர்கள் சுந்தரம், சின்னன் பிரகாஸ், புளு மெட்டல் இயக்குனர் வசந்த், ஸ்லீப் கம்பெனி பிரான்ஞ் இன்ஜார்ஜ் கணபதி, ரேணுகா பெயிண்ட்ஸ் முருகானந்தம், தி.மு.க., நிர்வாகி கிருஷ்ணன், மீனாட்சி மார்பில்ஸ் நிர்வாகி அருண் எலக்ட்ரிக்கல் அருண் பாஸ்கர், ஜானகி முத்தையா மஹால் நிர்வாகிகள் சதீஸ், பரணீஸ்வரன், பாபு, ராஜேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாக இயக்குநர் சக்தி கூறுகையில் கூறுகையில்,'இம் மஹாலில் 700 பேர் அமரும் ஏ.சி., ஹால், 180 இருக்கைகளுடன் டைனிங் ஹால், மணமகன், மணமகள் குளிர்சாதன அறை, கார் பர்க்கிங் வசதி உள்ளன,' என்றார்.திறப்பு விழா ஏற்பாடுகளை சக்தி தனலட்சுமி, கீர்த்திகா, வழக்கறிஞர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.