/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு
/
தேனியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு
ADDED : டிச 10, 2025 08:35 AM
தேனி: தேனி நகராட்சியில் சென்னை பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் வினய் தடுப்பூசி செலுத்திய மாணவிகளிடம் ஒவ்வாமை விபரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகளுக்கு டிச.5ல் டிப்திரியா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இவ்வகைதடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்திக்காக சிறுவர், சிறுமிகளுக்கு வழக்கமாக செலுத்தப்படும். இதில் சில மாணவிகளுக்கு ஒவ்வாமைஏற்பட்டு, வாந்தி எடுத்தனர். மாலையில் காய்ச்சல் அதிகரித்த நிலையில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்3 மாணவிகள் அனுமதிக்கப்பட்டு பூரண குணமடைந்தனர்.
இதனால் மாநில சுகாதாரத்துறை உத்தரவில் இணை இயக்குனர் டாக்டர் வினய், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜவஹர்லால் ஆகியோர் தடுப்பூசி செலுத்திய 18 மாணவிகளின் உடல் நிலையில் தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் ஓவ்வாமை எதுவும் ஏற்பட வில்லை என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தனர்.
நகராட்சி கமிஷனர் பார்கவி, நகர்நல அலுவலர் டாக்டர் கவிப்பிரியா,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

