/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
க.மயிலாடும்பாறை வளமிகு வட்டார திட்டத்தில் தேர்வு! 3 ஆண்டில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி
/
க.மயிலாடும்பாறை வளமிகு வட்டார திட்டத்தில் தேர்வு! 3 ஆண்டில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி
க.மயிலாடும்பாறை வளமிகு வட்டார திட்டத்தில் தேர்வு! 3 ஆண்டில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி
க.மயிலாடும்பாறை வளமிகு வட்டார திட்டத்தில் தேர்வு! 3 ஆண்டில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி
ADDED : மார் 16, 2024 06:26 AM
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய, பொருளாதார வளர்ச்சி குறைந்த வட்டாரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதில் 24 மாவட்டங்களில் தலா ஒரு ஒன்றியம், 13 மாவட்டங்களில் தலா இரு ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டன.
மாநில அரசு சார்பில் இந்த ஒன்றியங்களில் தலா ரூ.5கோடி செலவில் 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் இத்திட்டதில் தேர்வு செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2026-2027 நிதியாண்டிற்குள் சுகாதாரம், சமூகநலம், கல்வி, திறன்மேம்பாடு, வேலை வாய்ப்பு, வேளாண், பொருளாதாரம், அடிப்படை உட்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்தில் கல்வித்துறை மாணவர்களின் கல்வியை உறுதி செய்தல், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டசத்து வழங்குவதை உறுதி செய்தல்.இப்பகுதி புதிய தொழில் துவங்க நடவடிக்கை எடுத்தல், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பால் உற்பத்தி பெருக்கம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரோடு, குடிநீர், வீடுகள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்துதல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல், அனைத்து பகுதியிலும் மின்வசதி கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன.
ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் தலைமையில் நடைபெறும். இப்பணிகளை கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்பு குழு, திறன் மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் 187 தலைப்புகளில் மேற்கொள்ளப்பட உள்ளன என மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

