ADDED : செப் 20, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் வாசுதேவன், உதவி பொறியாளர் சந்தோஷ் , துப்புரவு அலுவலர் அரசகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பாலம், சாக்கடை கட்டுதல், திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள், டெங்கு மஸ்தூர் பணியாளர்களின் வேலை உள்ளிட்ட பல விசயங்கள் தொடர்பாக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரும் 2025 ஏப்ரல் முதல் வர்த்தக உரிமத்திற்கான கட்டணங்கள் குறித்து விளக்கப்பட்டது. அனைத்து வர்த்தகமும் சிறு,குறு தொழில் முதல் பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் வரை உரிமம் பெறாமல் நடத்தக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.