/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரள உயர் நீதிமன்றம் தலையீடு டபுள் டெக்கர் பஸ்சிற்கு சிக்கல்
/
கேரள உயர் நீதிமன்றம் தலையீடு டபுள் டெக்கர் பஸ்சிற்கு சிக்கல்
கேரள உயர் நீதிமன்றம் தலையீடு டபுள் டெக்கர் பஸ்சிற்கு சிக்கல்
கேரள உயர் நீதிமன்றம் தலையீடு டபுள் டெக்கர் பஸ்சிற்கு சிக்கல்
ADDED : ஜன 25, 2025 05:29 AM

மூணாறு : கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டால், மூணாறில் ' டபுள் டெக்கர்' பஸ் பயன்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மூணாறில் சுற்றுலா பயணிகள் பஸ்சில் பயணித்தபடி இயற்கை எழிலை ரசிக்கும் வகையில் ' கேரள அரசு போக்குவரத்து கழகம் ராயல் வியூ' திட்டத்தில் சுற்றிலும் கண்ணாடி இழை கொண்டு ' டபுள் டெக்கர்' பஸ் வடிவமைக்கப்பட்டது. அதனை திருவனந்தபுரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் ஜன. 1ல் துவக்கி வைத்தார். அந்த பஸ் ஜன.15க்குள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மூணாறுக்கு பஸ் வரவில்லை.
விசாரணை: இந்நிலையில் வாகனங்கள் உருமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தனர்.
சிக்கல்: அப்போது பஸ்சில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறி விளக்குகள் பொருத்தப்பட்டது எந்த அடிப்படையில் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்தனர். தவிர விதிமுறைகள் மீறி உருமாற்றம் செய்த வாகனங்களை எவ்வாறு தடுப்பது என்பதை மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரள உயர் நீதிமன்றம் தலையிட்டதால் பயன்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

