ADDED : செப் 15, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கூடலழகிய பெருமாள் கோயிலில் இருந்து சுவாமி அலங்காரத்துடன் ஞானியர் கோனார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோயில் வரை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப் பட்டது.
முன்னதாக குழந்தைகள் கண்ணன் ராதை வேடமணிந்து நடனம் ஆடினர். பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமியை தேரில் அலங்கரித்து ரத வீதி வழியாக ஊர்வலமாக சென்று கூடலழகிய பெருமாள் கோயிலில் நிறைவடைந்தது.
ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணரின் பஜனை பாடல்கள் பாடி விழாவில் பங்கேற்றனர்.