/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார் தொட்டிப் பாலம் கரை சீரமைப்பு 18ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு
/
கூடலுார் தொட்டிப் பாலம் கரை சீரமைப்பு 18ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு
கூடலுார் தொட்டிப் பாலம் கரை சீரமைப்பு 18ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு
கூடலுார் தொட்டிப் பாலம் கரை சீரமைப்பு 18ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு
ADDED : பிப் 13, 2024 04:53 AM

கூடலுார் : கூடலுார் அருகே சேதமடைந்த தொட்டிப் பாலம் கரைப்பகுதி மணல் மூடைகளால் சீரமைக்கப்பட்டு மீண்டும் 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடலுார் அருகே லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாயில் டிச.19ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
டிச. 31ல் லோயர்கேம்ப் அருகே கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்து ஜன. 8ல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் பிப். 10ல் தம்மணம்பட்டி தொட்டிப பாலம் அருகே கரைப்பகுதி உடைப்பு . இதனால் இரண்டாவது முறையாக தண்ணீர் நிறுத்தப்பட்டு மணல் மூடைகள் அடுக்கி சீரமைப்பு பணி நடந்தது.
நேற்று மாலை இப்பணி முடிவடைந்து மூன்றாவது முறையாக கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அடிக்கடி கரைப்பகுதி உடைப்பு ஏற்படுவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெயபால், முல்லைச்சாரல் விவசாய சங்க பொருளாளர், கூடலூர்:
பல ஆண்டுகளாக 18ம் கால்வாய் கரைப்பகுதி சீரமைக்கவில்லை. ஆக்கிரமிப்புகளும் அகற்றவில்லை. தூர்வாரப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் திறப்பதற்கு முன்பு கரைப்பகுதியை சீரமைக்க வலியுறுத்தினோம்.
எதையும் கண்டுகொள்ளாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இரண்டு இடங்களில் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டது.
இதனால் முழுமையாக தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியவில்லை. மேலும் 43 கண்மாய்களிலும் தண்ணீர் நிரம்பவில்லை.
நீர்வளத் துறை அதிகாரிகள் நிரந்தரமாக கரை பகுதியை சீரமைக்க முன்வர வேண்டும்.