/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில்களில் அம்மனுக்கு கூடாரவல்லி உற்ஸவ விழா
/
கோயில்களில் அம்மனுக்கு கூடாரவல்லி உற்ஸவ விழா
ADDED : ஜன 13, 2024 04:09 AM

கூடலுார் : கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவ விழா வெகு விமர்சையாக நடந்தது.
கூடலழகிய பெருமாள், ஆண்டாள் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பெருமாள், ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்கழி 27ம் நாளான நேற்று பக்தர்கள் திருவம்பாவை, திருப்பாவை பாடினர். கூடாரவல்லி விழாவில் சுவாமி கூடலழகிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இந்நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும், பிரிந்த தம்பதியர் கூடுவர் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். விழா முடிவில் அனைவருக்கும் உணவு, தாம்பூலம் வழங்கப்பட்டது.
பெரியகுளம்: வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. முன்னதாக பெருந்தேவி தாயாருக்கு பால், தயிர், பன்னீர், தேன், மஞ்சள், பழ வகைகள், திருமஞ்சனம் பொருட்களால் திருமஞ்சனம் நடந்தது. அம்மனுக்கு புத்தாடை அணிவித்து திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டது. தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் புஷ்பம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பெரியகுளம் ஸ்ரீ உத்தம காளியம்மன் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு அம்மனுக்கு காய்கறிகள் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.