/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
/
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED : மார் 16, 2025 06:57 AM
தேனி; தேனி பங்களாமேட்டில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் புணருர்த்தாரன மகா கும்பாபிஷேக விழா நாளை காலை 9:26 மணிக்கு மேல் காலை 10:26 மணிக்குள் நடக்கிறது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக நேற்று காலை விநாயகர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, மாலையில் 2, 3ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை மார்ச் 17 ல் மகா கும்பாபிேஷக விழா நடக்கிறது. ஏற்பாடுகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமையில் நிர்வாகிகள் கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன், செயலாளர்கள் ராமர்பாண்டியன், புலேந்திரன், இணைச் செயலாளர்கள் தாளமுத்து, பழனிவேல்முருகன், உறவின்முறை பத்ரகாளியம்மன் கோவில் பராமரிப்புக்குகுழுவினர் மேற்கொண்டுள்ளனர்.