
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான ஆலோசனைக் கூட்டம் எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பரிவார தெய்வங்களுக்கான பாலாலய பூஜை 2023 டிச.10 லும், மூலவர் விக்ரகத்திற்கான பாலாலய பூஜை 2025 ஜூன் 8 ல் நடந்தது.
தற்போது உபயதாரர்கள் மூலம் கோயிலில் புனரமைப்பு பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 1ல் நடத்த அறநிலையத்துறை
முடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக முன்னேற்பாடுகள், திட்டங்கள் குறித்து நடந்த பல்வேறு சமூகத்தினர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.

