/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குண்டளை அணை ரோடு சீரமைப்பு டிச.4 வரை வாகனங்கள் செல்ல தடை
/
குண்டளை அணை ரோடு சீரமைப்பு டிச.4 வரை வாகனங்கள் செல்ல தடை
குண்டளை அணை ரோடு சீரமைப்பு டிச.4 வரை வாகனங்கள் செல்ல தடை
குண்டளை அணை ரோடு சீரமைப்பு டிச.4 வரை வாகனங்கள் செல்ல தடை
ADDED : நவ 28, 2024 05:54 AM
மூணாறு: குண்டளை அணை பகுதியில் ரோடு சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழியில் டிச.4 வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் குண்டளை அணை உள்ளது. மின் வாரியத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் ஹைடல் டூரிசம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன. அணையின் மேல் பகுதி மற்றும் ரோடு ஆகியவை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த வழியாக குண்டளை, செண்டுவாரை ஆகிய எஸ்டேட்டுகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆகவே சேதமடைந்த பகுதிகள் மின்வாரியம் சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
தவிர பாதுகாப்பு கருதி படகு குழாமுக்கு செல்லும் வழியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படுகிறது. அப்பணிகளுக்காக குண்டளை அணை வழியாக வாகனங்கள் செல்ல டிச.4 வரை தடை செய்யப்பட்டது.