UPDATED : அக் 28, 2026 07:21 PM
ADDED : அக் 28, 2026 07:16 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை 2027 ஜன.,31க்குள் செலுத்திட தொழிலாளர் நலத்துறை அமலாக்க பிரிவு உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தொழிலாளர் நல நிதி சட்டப்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஓட்டல்கள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் பங்கு ரூ. 20, நிறுவனத்தின் பங்கு ரூ.40 என ஒரு தொழிலாளிக்கு ரூ.60 கணக்கீடு செய்து பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகையினை தொழிலாளர் நல வாரியத்தில் செலுத்த வேண்டும். நடப்பாண்டிற்கான தொகையை 2027 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
