/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை ஓ.பி.,சீட்டுக்கு தவிக்கும் நோயாளிகள்
/
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை ஓ.பி.,சீட்டுக்கு தவிக்கும் நோயாளிகள்
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை ஓ.பி.,சீட்டுக்கு தவிக்கும் நோயாளிகள்
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை ஓ.பி.,சீட்டுக்கு தவிக்கும் நோயாளிகள்
ADDED : ஜன 06, 2024 06:36 AM

பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஓ.பி.,சீட்டு வழங்குவதற்கு பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதிக்குள்ளாகின்றனர்.
பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு காலை 7:30 மணி முதல் மதியம் 12:00 வரை மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படுகிறது. இங்கு மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு, நுண் கதிரியக்க பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, தொற்றா நோய் பிரிவு உட்பட 23 சிகிச்சை பிரிவுகள் உள்ளது. தினமும் சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போது பருவநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சலில் பாதித்து அதிகமானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
மருத்துவமனையில் ஓ.பி., சீட்டு வழங்க இரு ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்கள் நோயாளிகளின் பெயர், அலைபேசி எண் ஆகிய விபரங்களை பதிவு செய்து ஓ.பி., சீட்டு வழங்குகின்றனர். நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் ஓ.பி.,சீட்டு பெற அரை மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே உடல் நலம் பாதித்து சிகிச்சைக்கு வருவோர் நீண்ட நேரம் நிற்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
ஓ.பி.,சீட்டு வழங்கும் இடத்தில் ஆண்களுக்கு இரு கவுண்டர்கள், பெண்களுக்கு இரு கவுண்டர்கள் முன்பு செயல்படுத்தப்பட்டது. தற்போது 2 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே உள்ளதால் ஓ.பி.,சீட்டு பெற நீண்ட தாமதம் ஆகிறது. முதியோர், கர்ப்பிணிகள் சிரமம் அடைகின்றனர். இங்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.