/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
லட்டில் கலப்படம்: தேங்காய் உடைத்து வழிபாடு
/
லட்டில் கலப்படம்: தேங்காய் உடைத்து வழிபாடு
ADDED : செப் 29, 2024 06:17 AM
ஆண்டிபட்டி, : -திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க கோரி தேனி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஹிந்து முன்னணியினர் தேங்காய் உடைந்து வேண்டுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் 108 தேங்காய்களை உடைத்து வேண்டுதல் வைத்தனர். இதில் ஹிந்து முன்னணி நகர் பொதுச்செயலாளர் ராஜ்குமார், தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் அருள்குமார், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் லோகேஸ்வரன், நிர்வாகிகள் ராஜபாண்டி, மகாலிங்கம், ஹிந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் ஜெய்தீபா உட்பட பலர் கலந்துகொண்டு ஆஞ்சநேயர் சுவாமியிடம் லட்டு கலப்பட செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டி தேங்காய்களை உடைத்தனர்.
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் உத்தமபாளையம் ஹிந்து முன்னணி பேரூர் செயலாளர் பெரியசாமி , கூடலூர் நகர் செயலாளர் ஜெகன் தலைமையில் ஹிந்து முன்னணி தொண்டர்கள் ஊர்வலமாக வந்து ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய்களை உடைத்து , லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
தேனி: ஹிந்து முன்னணி சார்பில் அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்தனர். அப்போது தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர். நகர தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார் நிர்வாகிகள் ராம்கண்ணன், வெங்கடேஷ், கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூடலுார்: ஹிந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் ஜெகன் தலைமையில் வாகனங்களில் ஊர்வலமாக சென்று அனுமந்தன்பட்டி அனுமன் கோயில் முன்பு 1008 தேங்காய் உடைத்தனர். லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கியவர்களை தண்டிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள், பாளையம் நகர் ஹிந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.