/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் தங்கும் விடுதிகள் சங்கம் சார்பில் ' வெப்சைட்' துவக்கம்
/
மூணாறில் தங்கும் விடுதிகள் சங்கம் சார்பில் ' வெப்சைட்' துவக்கம்
மூணாறில் தங்கும் விடுதிகள் சங்கம் சார்பில் ' வெப்சைட்' துவக்கம்
மூணாறில் தங்கும் விடுதிகள் சங்கம் சார்பில் ' வெப்சைட்' துவக்கம்
ADDED : பிப் 01, 2024 04:25 AM

மூணாறு : மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் தனியார் தங்கும் விடுதிகள் சங்கம் சார்பில் 'வெப் சைட்' துவங்கப்பட்டது.
சுற்றுலா நகரான மூணாறின் பெயர் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் பல்வேறு விதங்களில் ஏமாற்றப்படுகின்றனர். அதனை தவிர்க்கும் வகையில் தங்கும் விடுதிகளின் கூட்டமைப்பான மூணாறு ஹேம்ஸ்டே , காட்டேஜ், லாட்ஜ் சங்கம் சார்பில் www.staymunnar.com எனும் 'வெப் சைட்' துவங்கப்பட்டது. மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தொடங்கி வைத்தார். தலைவர் மோகன்குமார், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.