/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் தர்ணா
/
நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் தர்ணா
ADDED : ஜூலை 24, 2025 05:39 AM

தேனி : தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன்.
இவர் மீது தேனி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என நேற்று லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல் முன் வழக்கறிஞர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற அலுவலர்கள், போலீசார் நீதிமன்றங்களுக்கு சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டது. போராட்டத்திற்கு தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம், துணைச் செயலாளர் மகாலிங்கம் துணைத் தலைவர்கள் பாலமுருகன், பாஸ்கரன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.