ADDED : பிப் 02, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்டத்தில் தென்னையில் ஊடுபயிராக இலை வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
இப் பயிரில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாகுபடி தொழில்நுட்ப விபரங்கள் குறித்து விவசாயிகள் ஆலோசனைகள் பெற விரும்பினால் ஆராய்ச்சி மையத்தின் மூலம் விபரங்கள் பெற்று வழங்கப்படும். விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.