/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சென்டர் மீடியன்களில் போஸ்டர் ஒட்டுவதை கட்டுப்படுத்துங்கள்: கவனச் சிதறலால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
/
சென்டர் மீடியன்களில் போஸ்டர் ஒட்டுவதை கட்டுப்படுத்துங்கள்: கவனச் சிதறலால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
சென்டர் மீடியன்களில் போஸ்டர் ஒட்டுவதை கட்டுப்படுத்துங்கள்: கவனச் சிதறலால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
சென்டர் மீடியன்களில் போஸ்டர் ஒட்டுவதை கட்டுப்படுத்துங்கள்: கவனச் சிதறலால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
ADDED : ஆக 24, 2024 05:11 AM

போக்குவரத்து அதிமுள்ள நெடுஞ்சாலை பகுதி, ஆபத்து நிறைந்த வளைவான ரோடு பகுதிகளில் வாகன விபத்தை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் முக்கிய நகரங்களை இணைக்கும் அனைத்து ரோடுகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ள.
பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி முதல் தேனி வறட்டாறு வரையும், தேனி -போடி ரோடு, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம், கூடலுார் வரை ஆங்காங்கே விபத்துகளை தடுக்கும் நோக்கில் ரோட்டின் மையப் பகுதியில் சென்டர் மீடியன் அமைத்துள்ளது.
இவ்வசதியால் இப்பகுதிகளில் விபத்து குறைந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக சென்டர் மீடியன்களில் இரு பகுதிகளிலும் அரசியல் கட்சிகள் போஸ்டர் ஒட்டும் மட்டமான கலாச்சரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக பெரியகுளம், தேனியில் சென்டர் மீடியனை நாறவைக்கும் போஸ்டர் கலாச்சாரம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. முதலில் அரசியல் கட்சியினர் நிகழ்ச்சிகளுக்கான அடிக்கடி போஸ்டர்களை ஒட்டினர்.
ஒரு சில கட்சியினர் பிளக்ஸ் பேனரை இரும்பு பிரேமில் ஒட்டி நிறுத்த இயலாத சில கட்சியினர் சென்டர் மீடியனில் பிளக்ஸ் பேனரை பசையால் ஒட்டி வைக்கும் அவலம் நிகழ்கிறது. இதனை தொடர்ந்து அதில் காலமானார், போராட்டம், நினைவு அஞ்சலி என அனைத்து வகை போஸ்டர்களை ஒட்டி செல்கின்றனர்.
கவன சிதறலை ஏற்படுத்தும் போஸ்டர்கள்
ரோட்டில் வாகனங்கள் ஓட்டி செல்லும் வாகன ஓட்டிகள் பலர் இந்த போஸ்டர்களை பார்த்தபடி ஓட்டும் போது கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்குள்ளாகின்றனர்.
பெரியகுளம் பகுதியில் நடக்கும் டூவீலர் விபத்துக்கு அதிவேகம் ஒரு காரணம் என்றாலும், போஸ்டர்கள் மீது ஏற்பட்ட கவன சிதறல் விபத்துக்கு வழி வகுப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பெரியகுளம் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப் பகுதிகளில் இரு புறங்களிலும், பாரதி நகர் நுழைவுப்பகுயிலும் போஸ்டர் அதிகம் ஒட்டப்பட்டுள்ளது.
பொது சொத்தில் அசிங்கப்படுதும் வகையில் போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, சுண்ணாம்பு பூசிடவும், சாலைப் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து சென்டர் மீடியன்களை கண்காணிக்கவும், போஸ்டர்களை அகற்றும் பணி ஒதுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.