/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கால்நடை வளர்ப்போரும் 'கிஷான் கிரிடிட் கார்டு' பெற வாய்ப்பு! வங்கிகளில் தொழில்கடன் பெற்று பயன் பெறலாம்
/
கால்நடை வளர்ப்போரும் 'கிஷான் கிரிடிட் கார்டு' பெற வாய்ப்பு! வங்கிகளில் தொழில்கடன் பெற்று பயன் பெறலாம்
கால்நடை வளர்ப்போரும் 'கிஷான் கிரிடிட் கார்டு' பெற வாய்ப்பு! வங்கிகளில் தொழில்கடன் பெற்று பயன் பெறலாம்
கால்நடை வளர்ப்போரும் 'கிஷான் கிரிடிட் கார்டு' பெற வாய்ப்பு! வங்கிகளில் தொழில்கடன் பெற்று பயன் பெறலாம்
ADDED : ஜூலை 05, 2025 12:26 AM

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு (நபார்டு) வங்கியால் பரிந்துரைக்கப்பட்டு 1998 ல் கிஷான் கடன் அட்டை திட்டம் விவசாயிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி தேவைக்கு ஏற்ப குறுகிய கால, நீண்ட கால கடன் திட்டங்களில் கடன் பெற்றனர்.
இதில் விண்ணப்பதாரர் ஆதார் நகல், வேளாண் நில உரிமையாளருக்கான குத்தகை அல்லது சொந்த நிலத்திற்கான உரிய ஆவணங்கள், பான் கார்டு எண், வேறு எந்த வங்கியிலும் கடன் பெறவில்லை என்பதற்கான தடையில்லா சான்றிதழ் பெற்று வழங்கி கிஷான் கிரிடிட் கார்டு பெற்று, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி பெறலாம். இதில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கால்நடை வளர்ப்போருக்கும் இந்த கிஷான் கிரிடிட் கார்டுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
நல்வாய்ப்பு:தேனி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் 12,369 பேருக்கு கிஷான் கிரிடிட் கார்டு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1.6 லட்சத்திற்கான கடனுக்கு 6 மாதங்கள் வரை வட்டி கிடையாது. ஆறு மாதங்களுக்கு பின் வட்டி கணக்கிடப்படுகிறது. மேலும் 7 சதவீத வட்டியில் 3.5 சதவீத வட்டித்தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 3.5 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்தலாம். கால்நடை வளர்ப்போர் மத்தியில் இதற்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த கிஷான் கடன் அட்டை மூலம் நான்கு மாடுகளை வளர்ப்போர் பண்ணை மேலாண்மை செலவினங்களை ஈடு செய்ய ஒரு மாட்டிற்கு ரூ.14 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த தொகை அதிகரித்து வழங்கப்படும். திரும்ப செலுத்தும் திறன் உள்ள கால்நடை வளர்ப்போருக்கும் முன்னுரிமையும் வழங்கி, மீண்டும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில் ராஜா கூறியதாவது: இது அரசு, கால்நடை வளர்ப்போருக்கு வழங்கியுள்ள நல்வாய்ப்பாகவே கருதுகிறோம். கால்நடை வளர்ப்பில் மேலாண்மை செலவினங்களால் விவசாயிகள் சிரமப்படுவோர் அதில் இருந்து மீள இத்திட்டம் பயனுள்ளதாகும் என்றார்.