/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வார்டுகள், வாக்காளர்கள் அதிகரிப்பு
/
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வார்டுகள், வாக்காளர்கள் அதிகரிப்பு
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வார்டுகள், வாக்காளர்கள் அதிகரிப்பு
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வார்டுகள், வாக்காளர்கள் அதிகரிப்பு
ADDED : ஆக 14, 2025 02:52 AM
மூணாறு: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் அதிகரித்துள்ள நிலையில், வாக்காளர்களும் அதிகரித்துள்ளனர்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வார்டுகள் மறு சீரமைக்கும் பணிகள் பூர்த்தியானது. அதேபோல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தங்கள் செய்யவும், பட்டியலில் பெயர் சேர்க்கவும் நேற்று முன்தினம் (ஆக. 12) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதிகரிப்பு: இம்மாநிலத்தில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் மறு சீரமைக்கப்பட்ட வார்டுகளின் எண்ணிக்கை ஏற்கனவே வெளியிட்டப்பட்ட நிலையில் மாவட்ட ஊராட்சிகளில் வார்டுகள் மறுசீரமைக்கும் பணி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அதன்பிறகு வெளியிடப்பட்ட கணக்குப்படி வார்டுகளின் எண்ணிக்கை 21,900ல் இருந்து 23,612 ஆக அதிகரித்தது.
941 ஊராட்சிகளில் வார்டுகள் எண்ணிக்கை 1,59,62ல் இருந்து 1,73,37 ஆகவும், 152 ஊராட்சி ஒன்றியங்களில் 2080ல் இருந்து 2267 ஆகவும், 87 நகராட்சிகளில் 3113ல் இருந்து 3241 ஆகவும், 6 மாநகராட்சிகளில் 414ல் இருந்து 421 ஆகவும், 14 மாவட்ட ஊராட்சிகளில் 331ல் இருந்து 346 ஆகவும் வார்டுகள் அதிகரித்தன.
வாய்ப்பு: அதேபோல் மாநிலம் முழுதும் அரசியல் கட்சியினரும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த ஜூலை 23ல் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை 2.66 கோடியாக இருந்தது. புதிதாக பெயர்களை சேர்க்க 29.81 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பட்டியலில் இருந்து 4.45 லட்சம் பேர் நீக்க வாய்ப்புள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 2.92 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க வாய்ப்புகள் உள்ளன.