/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகள் பூட்டி வைப்பு
/
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகள் பூட்டி வைப்பு
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகள் பூட்டி வைப்பு
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டிய வீடுகள் பூட்டி வைப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:14 AM
உத்தமபாளையம்: தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 480 வீடுகள் கட்டி முடித்து 40 மாதங்களாகியும், பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் பூட்டியே உள்ளது.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்காக உத்தமபாளையம் அருகே 480 வீடுகள் கட்டப்பட்டது. உத்தமபாளையத்தில் இருந்து கோம்பைக்கு செல்லும் ரோட்டில் சிக்கச்சியம்மன் கோயில் அருகில் கட்டப்பட்டுள்ளது .
கடந்த 2019 ல் இடம் ஒப்படைப்பு செய்து, 15 மாதங்களில் கட்டி முடிக்க நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2021 பிப்ரவரியில் பணிகள் நிறைவடைந்தது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு 40 மாதங்களாகிறது. ஆனால் பயனாளிகள் வீடுகளில் குடியேறவில்லை. பயன்பாடு இன்றி உள்ளதால் வீடுகளுக்குள் கரையான் படிய துவங்கி உள்ளது. செடி கொடிகள் வளர்த்து புதர்கள் மண்டியுள்ளது. கட்டி முடித்து 40 மாதங்களை கடத்தும் வீடுகள் பயனாளிகளிடம் ஏன் ஒப்படைக்க வில்லை என்பது தெரியவில்லை.
இது குறித்து வருவாய்த் துறையில் விசாரித்த போது, 'கடந்தாண்டு கனிசமான வீடுகளில் ஆட்கள் குடியேறி உள்ளனர். மீதமுள்ள வீடுகளிலும் விரைவில் பயனாளிகளை குடியமர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'என்கின்றனர்.