/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜல்லி கற்கள்கொண்டு சென்ற லாரி பறிமுதல்
/
ஜல்லி கற்கள்கொண்டு சென்ற லாரி பறிமுதல்
ADDED : ஜூலை 20, 2025 05:07 AM
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே அனுமதி இன்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான குழுவினர் கண்டமனூர் அருகே
இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 25 மெட்ரிக் டன் எடை கொண்ட ஜல்லி கற்கள் இருந்துள்ளது. ஜல்லி கற்கள் கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டை டிரைவரிடம் கேட்டபோது டிரைவர் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி தலை மறைவாகினார். இதனைத் தொடர்ந்து ஜல்லி கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த கனிமவளத்துறை அதிகாரிகள் அதனை கண்டமனூர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.