ADDED : நவ 27, 2024 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: உசிலம்பட்டி தாலுகா ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் 57. லாரி உரிமையாளர், டிரைவராக உள்ளார். பெரியகுளம் பகுதியில் லோடு ஏற்றிக்கொண்டு, மூன்று லோடுமேன்களுடன் தேவதானப்பட்டி அருகே ஓட்டலில் சாப்பிட்டுள்ளார்.
லாரி அருகே செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. காயமடைந்த மகாராஜன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.