ADDED : நவ 01, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கம்பம் மெட்டு பைபாஸ் ரோடு சந்திப்பு அருகில் சந்தேகப்படும் படி ஒருவர் நின்று கொண்டிருப்பதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.ஐ., நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கையில் துணிப்பையுடன் உத்தமபாளையம் இந்திராநகர் ஹக்கீம் நின்றிருந்தார். விசாரிக்க முயன்றபோது பையை கீழே போட்டு விட்டு ஓடினார். பையினுள் ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகள் இருந்தது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஹக்கீம் மீது போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.